மேற்கு வங்க மாநிலத்தில் தீபாவளி, புத்தாண்டு, காளி பூஜை போன்ற பண்டிகையின்போது பட்டாசுகளை விற்பதற்கு பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த வருடம் கொரோனா தீவிரமாக இருந்த காரணத்தினால் தீபாவளி உள்ளிட்ட பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தாக்கம் இல்லை எனினும், மூன்றாவது அலை தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெரும்பாலான மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய வேண்டும் என்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் தீபாவளி, காளி பூஜை, சாத் பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகிய பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும் விதிமுறையை மீறி பட்டாசுகளை விற்பனை செய்பவர்களிடமும், வெடிப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.