பிரட் லட்டு செய்ய தேவையான பொருள்கள் :
கடலை பருப்பு – 150 கிராம்,
பிரட் ஸ்லைஸ் – 8
வெல்லம் – 1/2 கிலோ,
தேங்காய் – 1/2 மூடி
ஏலக்காய் – 5
நெய் – 100 கிராம்.
முதலில் கடலை பருப்பை கிள்ளு பதமாக வேக வைத்து, தண்ணீரை சுத்தமாக் வடித்து, மிக்ஸியில் உதிராக அரைத்து சிறிது நெய்யில் வதக்கிக் கொள்ளவும்.
அதன் பின் தேங்காயை துருவி, சிறிது நெய்யில் லேசாக வறுத்து வைக்கவும். பிரெட்டை மிக்ஸியில் போட்டு ஓட்டினால பொலபொலன்னு வரும்.
பின்பு அதையும் சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தட்டி, சிறிது தண்ணீரை சேர்த்து, கரைத்து, வடிகட்டி அடுப்பில் வைக்கவும்.
அடுத்தது கொதிக்கும் போது, அரைத்த கடலை பருப்பு, பிரட்,தூளாக்கிய ஏலக்காய், தேங்காய், மீதி நெய் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும். ஆறியவுடன் எழுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும்.