தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் இனி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் கேழ்வரகு வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களின் உணவு பழக்க வழக்கங்களும் பாதுகாக்கப்படும் வகையில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு அரிசிக்கு பதில் 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. இதன் மூலமாக மலைவாழ் மக்களின் வாழ்வு மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.