தமிழகத்தில் சில தினங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை வெயிலால் மக்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக சென்னையில் வெயில் கடுமையாக உளது. அளிக்கும் இதையடுத்து கோடை வெயிலுக்கு விதமாக சில நாட்களாகவே தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
இந்நிலையில் அரபிக் கடலில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி நகரக்கூடும் எனவும் இது புயலாக உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.