தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.இந்த மாவட்டத்தில் 2000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முக்கிய விசேஷ நாட்களில் சேலம் கோட்டம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.
அவ்வகையில் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய நாட்களிலும் அதற்கு முந்தைய நாட்களிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.