தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது நவம்பர் 29ஆம் தேதி முதல் தொடங்கியது. அது முதலே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கி வந்தது. இதற்கிடையில் மாண்டஸ் புயல் காரணமாகவும் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நேற்று கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சி திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என தகவல் பரவி வந்த நிலையில், அந்த தகவல் உண்மையில்லை என அம்மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.