ஒவ்வொரு வருடமும் தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவிற்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கௌமாரிஅம்மன் சித்திரை திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு மே 13-ம் தேதி(இன்று) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வீரபாண்டி கவுமாரியம்மன் சித்திரை திருவிழாவை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனவே அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை இருப்பினும் பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெறும். இந்த உள்ளூர் விடுமுறை ஈடுசெய்யும் விதமாக மே-28ஆம் தேதி அரசு அலுவலங்கள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.