தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் பெரம்பலூர் மாநகராட்சியில் அரும்பாவூர் லெப்பைக் குடிக்காடு உட்பட ஏழு பகுதிகளில் கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பால், காய்கறி கடைகள் காலை 10 மணி முதல் 4 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.