Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று….. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள முத்துப்பேட்டை-ஜாம்புவானோடை தர்ஹா மஹான் செய்குதாவுது ஒலியுல்லா ஆண்டவரின் 720 வது ஆண்டு விழா கொடி ஊர்வலமாக புறப்பட்டு பழைய, புதிய பேருந்து நிலையம், ஆசாத் நகர் வழியாக சென்று மீண்டும் தர்ஹாவை அடைந்து கந்தூரி விழா கடந்த டிசம்பர் 5 தேதி கொடி ஏற்றப்பட்டது . கடந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக இந்த விழாவிற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த வருடம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

முத்துப்பேட்டை கந்தூரி விழாவையொட்டி இன்று டிசம்பர் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதற்கு பதிலாக ஜனவரி 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |