சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காளையார் கோவிலில் நடைபெறும் குருபூஜை மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தினத்தை ஒட்டி இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில்,வருகின்ற 24-ஆம் தேதி திருப்பத்தூரில் மாமன்னர் விருது பாண்டியர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 22ஆம் தேதி வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் மானாமதுரை, திருபுவனம் ஆகியவற்றில் இயங்கும் மது அருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.