Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் கடந்த வருட பாதிப்பு… தடுப்பு நடவடிக்கை ஆய்வில்… அரசு செயலாளர் தகவல்..!!

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வருடம் கொரோனா தொற்றால் 7 ஆயிரத்து 239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அரசு செயலர் மகேசன் காசிராஜன் தெரிவித்தார்.

தமிழக அரசின் அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் சிவகங்கை மாவட்ட கொரோனா தடுப்பு பணிகள் கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த இரண்டு நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் தங்கியிருந்து கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். கொரோனா தொற்று சிகிச்சை பிரிவு உள்ள சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டார். அதன்பின்னர் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து கொரோனா சிகிச்சை வழங்குவதற்காக அமராவதிபுதூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டையும் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் பரவும் நிலை, மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கையால் குறைந்துள்ளது. எதிர்பாராதவிதமாக கொரோனா தொற்று பரவும் நிலை ஏற்பட்டால் அதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. கடந்த வருடத்தில் 7,239 பேர் வைரஸ் பாதிப்பினால் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் 127 பேர் உயிரிழந்தனர். மேலும் கொரோனா பரவலை கட்டுபடுத்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்றார்.

Categories

Tech |