Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில்….. “டாஸ்மாக் கடைகள் மூடல்”….. மதுப் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

அரியலூர் மாவட்டத்தில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் ஜெ குரு-வின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

வன்னியர் சங்கத் தலைவராக இருந்த ஜெ குரு என்கின்ற குருநாதன் கடந்த 2018 மே 25 உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதைத்தொடர்ந்து அவருக்கு பாமக சார்பில் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் ரூபாய் 2 கோடி செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வொரு வருடமும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் தொண்டர்கள் காடுவெட்டிக்கு வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

அந்த வகையில் இன்று அரியலூர் மாவட்டத்திற்கு தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுப்பதற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது .மேலும் அவரின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்திய பொதுமக்கள் வர உள்ளதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வராமல் இருக்க மீன்சுருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 22 டாஸ்மாக் கடைகளை மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செந்துறை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, பாப்பாக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |