கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோட்டாறு தூய சவேரியார் பேராலயம் உலக அளவில் புனித சவேரியாருக்கான முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம். அதனால் ஒவ்வொரு வருடமும் இங்கு நவம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை திருவிழா கொண்டாடப்படும். அவ்வகையில் நடப்பாண்டிற்கான திருவிழா கொடி ஏற்றத்துடன் கடந்த மாதம் தொடங்கிய நிலையில் நாளை அதாவது டிசம்பர் 3ஆம் தேதி திருவிழாவை முன்னிட்டு காலை 11 மணிக்கு தேர் பவனி வரவுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த வருடம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இதனை பொதுமக்கள் அனைவரும் மிகச் சிறப்பாக கொண்டாட ஏதுவாக நாளை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 28ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.