Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

அரியலூர் மாவட்டத்தில் வரும் ஜூலை 28ம் தேதி, உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் புகழ்வாய்ந்த கோயில்களில் ஒன்று. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழரின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் 26 ஆம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் மாற்று வேலைநாள் குறித்து தகவல் இல்லை.

 

 

Categories

Tech |