தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. அதனால் கன்னியாகுமரி,நீலகிரி மற்றும் கோவை ஆகிய மூன்று மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் வால்பாறை வட்டத்தில் மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமிரன் தெரிவித்துள்ளார். அதிக கன மழை எச்சரிக்கை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
Categories