மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் சீர்காழி தாலுகாவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் இன்று வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதான சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.