Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில்….. 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு….. வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!

சிதம்பரத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அந்த மாநிலத்தில் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் , மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பின் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து உபரி நீர் வெளியேறி வருவதால் சிதம்பரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது .

Categories

Tech |