Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்த முகம் ஒரு போதும் தவறான கோணத்தில் இருக்காது”…. ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம்…. ட்ரெண்டிங்….!!!!

நடிகர் ரஜினியின் புது புகைப்படம் ஒன்றை அவரது மகளான ஐஸ்வர்யா டுவிட்டரில் பகிர்ந்து இருக்கிறார். ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் காட்சிகளானது சென்னை புறநகர் பகுதிகளான கிழக்கு கடற்கரை சாலை, எண்ணூரில் வேகமாக படமாக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் விஜயதசமியை முன்னிட்டு இன்றைய தினம் ரஜினியின் மூத்தமகளான ஐஸ்வர்யா டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, இம்முகம் ஒரு போதும் தவறான கோணத்தில் இருக்காது. ஏனெனில் நேர்மறையான விலை மதிப்பற்ற புகைப்படம். அனைவருக்கும் விஜய தசமியின் வாழ்த்துக்கள் என்று கூறியதோடு ரஜினியின் போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |