பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதியதாக மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தை திறக்கும் முடிவினை உயர்நீதிமன்றம் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வகுத்தார். சங்கத்தின் தலைவர் வள்ளுவன்நம்பி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் குன்னத்தில் புதிதாக மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தை திறக்கும் முடிவினை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் ஏற்கனவே இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு கடந்த 16-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வக்கீல்கள் சங்கத்தினர் இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.