பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் புதிதாக குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கும் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வக்கீல்கள் கண்டன ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெரம்பலூர் காவல்துறையினர் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கவில்லை.
இதையடுத்து பெரம்பலூர் வக்கீல்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வைக்கீல்கள் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்க முடிவினை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.