Categories
தேசிய செய்திகள்

இந்த முறையாவது ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா… ஏன்னா வாதாட போறது யார் தெரியுமா…?

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஆரியன் கானின் ஜாமீன் வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் அதிரடி சோதனை செய்தனர். இதில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது ஆரியன் கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் 2 முறை ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த போதும் நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தற்போது மூன்றாவது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனு மும்பை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த ஜாமீன் மீதான மனு விசாரணையில் ஆர்யன் கான் சார்பில் மத்திய அரசின் முன்னாள் அடர்னி ஜெனரலான முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடுகிறார். மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞரே இந்த வழக்கில் ஆஜராக உள்ள நிலையில் இன்று நடைபெற உள்ள ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆரியன் கானுக்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |