இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் ரிஷி சுனக் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் லிஸ் டிரஸ் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து பிரதமர் லிஸ் டிரஸ் கடந்த 20- ஆம் தேதி தனது ராஜினாமாவை அறிவித்தார். இந்நிலையில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளது. ஆனால் கன்சர்வேடிவ் கட்சியில் 357 எம்.பி.கள் உள்ளதால் 100 எம்.பி.கள் ஆதரவை பெற்றால் 3 பேர் போட்டியிட முடியும். ஆனால் யாராவது ஒருவர் 158 எம்.பி.கள் ஆதரவை பெற்றால் இரண்டு பேர் மட்டுமே போட்டியிட முடியும். இந்நிலையில் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது நாளை மாலை தெரியவரும். ஆனால் இரண்டு பேர் போட்டியிட்டால் இணையவழியில் ஓட்டு பதிவு நடைபெறும். இதன்மூலம் 28-ஆம் தேதி முடிவுகள் வெளிவரும்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும், முன்னால் நிதி மந்திரியான இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கும், இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன் இன்னும் அதிகாரப்பூர்வமாக களத்தில் இறங்கவில்லை என்றாலும், அவர் எம்.பி.களின் ஆதரவை பெறுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில் ரிஷி சுனக் நேற்று 104 எம்.பி.கள் ஆதரவை பெற்றுவிட்டார் . ரிஷி சுனக்குக்கு ஆதரவு அளித்துள்ள முன்னாள் துணை பிரதமர் டொமினிக் ராப் கூறியதாவது. ரிஷியிடம் சரியான திட்டம் இருக்கிறது. அவர் நாட்டின் பொருளாதாரம் நிலைக்கு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துகின்ற சிறந்த வேட்பாளராக இருப்பார். அவர் பல லட்சம் தொழிலாளர்களுக்கு நம்பிக்கை அளிப்பார். எனவே லிஸ் டிரசுடன் கடந்த முறை போட்டியிலிருந்து வெற்றி வாய்ப்பை இழந்த ரிஷி சுனக் சென்ற முறை விட்டதை இந்த முறை பிடிப்பார் என அவர் கூறியுள்ளார்.