Categories
மாநில செய்திகள்

இந்த முறை “மஞ்சப்பையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு”…. தயாரிப்பு பணிகள் தீவிரம்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இத்தோடு கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசு தொகுப்பில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் உள்ளிட்ட 21 மளிகை பொருட்கள் இடம்பிடித்துள்ளது. ஜனவரி-3 முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பொங்கல் பரிசு தொகுப்பானது மஞ்சப்பைகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  பொங்கல் பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் பைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 18 க்கும் அதிகமான இடங்களில் நவீன எந்திரங்கள் மூலம் பைகள் அச்சிடும் பணி நடைபெறுகிறது. அத்துடன் இருபதுக்கும் அதிகமான இடங்களில் இந்த பைகளை வெட்டும் பணிகள் நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பைகளை உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Categories

Tech |