சென்னையில் இருந்து கத்தார் தலைநகர் தாஹாவுக்கு நேரடி விமான சேவையை டாட்டா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இருந்து தேஹாவுக்கு நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த மாதம் 30 ஆம் தேதி முதல் இந்த விமான சேவை அறிமுகப்படுத்தப்படும். கத்தாரில் நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நேரில் பார்த்து ரசிக்க விரும்புபவர்களுக்கு இந்த விமான சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதனை தொடர்ந்து இந்த புதிய விமான சேவை சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களை இந்த மாதங்களில் இணைக்கும். மும்பையில் இருந்து வாரத்திற்கு 13 விமானங்களுக்கும், ஹைதராபாத்தில் வாரத்துக்கு 4 விமானங்களும், சென்னையில் இருந்து வாரத்துக்கு 3 விமானங்களும் கத்தாருக்கு நேரடியாக இயக்கப்படும். ஏற்கனவே தற்போது டெல்லிக்கும் கத்தாருக்கும் இடையே அளிக்கப்பட்டு ஒரு நேரடி விமான சேவையுடன் கூடுதலாக இந்த விமான சேவை அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.