தன் கடை விளம்பர படங்களில் நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் சரவணன் அருள். இவர் தானே ராஜா மாதிரி இருக்கிறேன் ஹீரோவாக என் நடிக்க கூடாது என்று ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோவாகிவிட்டார். ஜேடி-ஜெர்ரி இயக்கிய தி லெஜென்ட் படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்தார். மேலும் தனக்கு ஜோடியாக நயன்தாராவின் நடிக்க வைக்க முயன்று தோல்வி அடைந்தார். அதன் பிறகு பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். அதனைதொடர்ந்து படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்தார்கள். அதாவது, லெஜன்டின் முகத்தில் ஒரு எக்ஸ்பிரஷனும் இல்லை என்று கூறினார்கள்.
லெஜன்ட் படத்திற்கு மோசமான விமர்சனங்கள் எழுந்து போதிலும் அதன் சாட்டிலைட் உரிமம், ஓடிடு உரிமம் ஆகியவை ரூ.45 கோடிக்கு விற்பனையானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு வெற்றி நாயகனாககிய மக்களுக்கு மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார். லெஜனின் ட்விட்டை பார்த்தவர்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதன்படி இந்த ரணகளத்திலும் இப்படி ட்வீட் செய்ய லெஜெண்டால் மட்டுமே முடியும். இந்த இந்த நம்பிக்கை இருக்கும் வரை அவரை யாராலும் அசைக்க முடியாது. இன்னும் லெஜன்ட் படத்தை கலாய்த்து வருகிறார்கள்.