Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இந்த ராசிக்காரர்க்கு “பணவரவு இன்று அமோகமா இருக்கும்” இன்றைய முழு ராசிபலன் இதோ…

மேஷம் ராசி அன்பர்கள்…!! இன்று மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். முயற்சிகளுக்கான நல்ல பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து வளர்ந்து சமூக அந்தஸ்தில் உயர்வு காண்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் சீராகும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றப்பாதையில் செல்லும். நிதிஉதவி கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குவது ரொம்ப நல்லது. புத்திக்கூர்மையுடன் செயல்படுவது எதிர்கால முன்னேற்றத்திற்கு உதவும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்

 

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று சிந்தனைகள் வெற்றி பெற குல தெய்வத்தை வழிபட வேண்டிய நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். துணையாக இருப்பவர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். இன்று மிக கவனமாக பேசுவதும் கோபத்தை குறைப்பது நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேரும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழிபிறக்கும். வரவேண்டிய பணம் கையில் வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கும். வீண் வாக்குவாதங்கள் ஆகியவை ஏற்படும்.

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கூடுமானவரை பேசும்போது மட்டும் நிதானமாகப் பேசுங்கள் அது போதும். இன்று மாணவச் செல்வங்கள்கடுமையாக உழைப்பார்கள். படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பாருங்கள் அப்பொழுதுதான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும் .

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள.நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும்  அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்; நீலம் மற்றும் பச்சை நிறம்

 

மிதுனம் ராசி அன்பர்கள்..!! இன்று நல்ல செயலை சிலர் பரிகாசம் செய்து பேசுவார்கள். நம்பிக்கையுடன் செயல் படுவது அவசியம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற மாற்றுத் திட்டம் உதவும். சராசரி அளவில் பணவரவு கிடைக்கும். வாகனத்தில் பராமரிப்பு செலவு ஏற்படும். மற்றவர்கள் மீது பரிவு காட்டும் குணம் மேலோங்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வெளியூர் பயணம் சாதகமான பலனையே கொடுக்கும்.

திருமண முயற்சிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சாதகமான பாலன் கிட்டும். ஆடை ஆபரணம் சேரும். விருந்தினர்கள் வருகை இருக்கும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி முன்னேற்றமான நிலவும் சூழல் நிலவும் இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகவும் இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு  நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 9 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்; ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்

கடக ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு மேலோங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் மாற்றம் செய்யலாமா என்னும் சிந்தனை மேலோங்கும். குடும்ப பெரியவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. இன்று குடும்பத்தில் சுகம் ஏற்படும் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும் கணவன் மனைவிக்கு இடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும் அடுத்தவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள்.

பயணங்கள் சாதகமான பலனைக் கொடுக்கும் பொறுப்புகள் கூடும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும் சுதந்திரமான எண்ணம் ஏற்படும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் வெற்றிமேல் வெற்றி வந்து குவியும். அதுமட்டுமில்லாமல் சக மாணவரின் ஒத்துழைப்பும் முழுமையாக கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா  நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள. ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும்  அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்:  ஊதா மற்றும் மஞ்சள்

 

சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று கொடுக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலையை பகிர்ந்து கொள்வார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதங்கம் அடையக்கூடும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண கூடும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும். இன்று  மதிப்புக் கூடும் நாளாக இருக்கும். மற்றவர்களின் நன்மைக்காக வாதாடி வெற்றி கொள்வீர்கள்.

இன்று கெளரவம் அந்தஸ்து உயரும்.தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது  வெற்றிகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக தான் இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் வெற்றிமேல் வெற்றி வந்து குவியும். ஆசிரியர்களின்  முழு ஒத்துழைப்பும் சக மாணவர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும்  அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம் மற்றும் மஞ்சள்

 

கன்னி ராசி அன்பர்கள்…!! இன்று நண்பர்களிடம் கேட்ட உதவி உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். பணிகளில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி நிலை சிறப்பானதாக இருக்கும். உபரி வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். மக்கள் பிரச்சினைகளை தீர்த்து அவர்களின் நல்ல ஆதரவை பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருக்கும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் செயல்திறன் மூலம் கடின பணிகளையும் எளிதாக செய்து முடிப்பார்கள். இன்று உங்களுடைய வசீகரமான தோற்றம் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். வாகனம் வாங்க கூடிய யோகமும் இன்று இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும்.  அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்:  மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

துலாம் ராசி அன்பர்களே, இன்று எதிர்வருகின்ற சூழ்நிலை சங்கடத்தை கொடுக்கலாம். மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள், தொழில் வியாபாரத்தில் குளறுபடியை மாற்றத்தால் சரிசெய்வது நல்லது. சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும், பொருட்களை பாதுகாக்கிறேன் என்று ஏற்பதற்கு வேண்டாம்.

இன்று  குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும், கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கி நெருக்கம் கூடும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இயந்திரங்களை கையாளும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்.

நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். எதிர்ப்புகள் விலகும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள், பாடத்தில் சந்தேகம் ஏதும் இருப்பின்  ஆசிரியர்களிடம் தைரியமாக எழுந்து நின்று கேளுங்கள்.

இன்று  சக மாணவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள்,  இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

 

விருச்சிக ராசி அன்பர்களே, இன்று குறைகள் அகல குல தெய்வத்தை வழிபட வேண்டிய நாடாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களுக்கு கொடுத்து உதவும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் பலன் கிடைக்கும். வீடு இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

இன்று மனக்குழப்பம் அகலும் நாளாகவே இருக்கும். எடுக்கும் காரியம் சிறிது முயற்ச்சிக்கு பின் நடைபெறும். தொழில் வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருந்து சீராகும். இன்று பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூட கொஞ்சம் பணியாற்ற வேண்டி இருக்கும்.

கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் அவ்வப்போது வந்து செல்லும். கூடுமானவரை பேசும் பொழுது கொஞ்சம் நிதானித்து பேசுவது நல்லது. பூர்வீக சொத்துக்கள் கொஞ்சம் வரவேண்டியது தாமதப்பட்டு தான் வந்து சேரும். கொடுக்கல், வாங்கல்களில் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்.

யாருக்கும் இன்று ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். பஞ்சாயத்துக்களில் ஈடுபடவேண்டாம். பணம் நான் வாங்கி தருகிறேன் என்று எந்தவித ஒப்புதலும் அளிக்காதீர்கள். இன்று  மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.

படித்த பாடங்களை எழுதிப் பாருங்கள் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அது மட்டும்இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், நினைத்த காரியம் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெளிர் பச்சை

 

தனுசு ராசி அன்பர்களே,  இன்று ஆன்மிகப் பெரியோரின் அன்பும், ஆசியும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் நட்பு கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்ய முன் வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள்.

சிந்தனை திறன் பெருகும், இன்று பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள்.  தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருங்கள்.

இன்று  ஆயுதங்கள், நெருப்புகள்  பயன்படுத்தும் பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இன்று  மாணவச் செல்வங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது ரொம்ப நல்லது. படித்ததை எழுதிப் பார்ப்பது ரொம்ப, ரொம்ப நல்லது.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்பொழுது வெள்ளை நிறத்தில் அல்லது கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று  சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களில் ஈடுபடுங்கள், அனைத்து காரியம் உடனே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் நீலம்

மகரம் ராசி அன்பர்களே, இன்று மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டு தொந்தரவு கொடுப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வாகனத்தில் செல்லும்போது கவனம் இருக்கட்டும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் ஈட்டுவீர்கள்.

உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள், இன்று  ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற எண்ணம் மனக்கவலை இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடும். கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.

உடன் இருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்கு தடை வராமல் காக்கும். இன்று  காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். திருமண முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் நடக்கும். மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள்.

படித்ததை எழுதிப் பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளஞ்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்

 

கும்பம் ராசி அன்பர்களே, இன்று தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நாளாகத்தான் இன்று இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியிலிருந்து விலகி செல்லும் தொல்லை தந்தவர்கள் விலகி செல்வார்கள். இன்று சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்தி கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மையை கொடுக்கும்.

மேலிடத்திற்கு உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதங்கள் வந்து செல்லலாம், மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் எடுப்பதற்கு உதவும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் திடீர் என்று தோன்றலாம். கவனமாக இருங்கள் உங்களுடைய பேச்சில் ரொம்ப கவனமாக இருங்கள்.

குடும்ப செலவுகள் இன்று கூடும்.தேவை இல்லாத பொருட்கள் தயவுசெய்து வாங்க வேண்டாம்.  இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று  சிவபெருமானை வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

 அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் இளம் மஞ்சள்

 

மீனம் ராசி அன்பர்களே, கடந்த இரண்டு மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகிச் சென்று அன்பு கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். உடல் நலத்தை பொருத்தவரை இன்று சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட வேலைகள் தானே நடந்து முடியும். உத்யோகத்தில்  புதிய தொடர்பு கிடைக்கும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பும் பரிபூரணமாக கிடைக்கும். இன்று குடும்ப ஒற்றுமை மேலோங்கும். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை வெளிப்படும். வெளியில் தங்கும் சூழ்நிலை உருவாகும்.

எடுத்த காரியத்தை செய்யும் பொழுது எது சரி, எது தவறு என்ற மன குழப்பம் அவ்வப்போது வந்து செல்லும். உங்களுடைய திறமையால் அதனை ரொம்ப சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு மற்றவர் நலனை அக்கறையுடன் கவனிப்பீர்கள். செலவுகள் கொஞ்சம் கூடும். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும், கவனம் இருக்கட்டும்.

இன்று பேசும்பொழுது கொஞ்சம் நிதானமாகவே பேசுங்கள், இன்று மாணவச் செல்வங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியரின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணிகள் மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

வெள்ளை நிறம் உங்களுக்கும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

 

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |