Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இந்த லிங்கில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் ” ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு நடந்த விபரீதம்…. தீவிர விசாரணை போலீஸ்….!!

ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் பண மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது  செல்போனிற்கு வங்கி கணக்கின்  கே.ஓய்.சி விவரங்களை கீழே உள்ள லிங்கில்  அப்டேட் செய்யுமாறு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை நம்பிய அவர் தனது வங்கி விவரத்தை அந்த லிங்கில் பதிவு செய்துள்ளார்.

இதனையடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்ததாக  குறுஞ்செய்தி  வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |