Categories
சினிமா தமிழ் சினிமா

‘இந்த லெவலுக்கு போகும்னு தெரியல… நான் நல்லாத்தான் இருக்கேன்’… மனோபாலா டுவீட்…!!!

நடிகர் மனோபாலா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் மனோபாலா. இவர் பல டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். மேலும் நடிகர் மனோபாலா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். சமீபத்தில் மனோபாலா படுத்திருக்கும்போது செல்பி எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் .

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நினைத்து உடம்பு சரியில்லையா?, என்ன ஆச்சு?, கொரோனாவா? என கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இது குறித்து மனோபாலா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் ‘என் அன்பு மக்களே… நான் ஏதோ ஒரு போட்டோவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல… நான் நல்லாத்தான் இருக்கேன். ஒண்ணுமில்லை.. அன்பு காட்டிய (அப்படிதான் சொல்லனும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்’ என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |