Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி இனி இயங்காது… ரிசர்வ் வங்கி உத்தரவு… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!!!

கான்பூரில் இயங்கி வரும் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின்  உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய  உத்தரவிட்டுள்ளது.

நிதிநிலை மோசமாக உள்ள வங்கிகளில் உரிமத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்ய உத்தரவிட்டு இருக்கிறது. இந்த வரிசையில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் இயங்கிவரும் கூட்டுறவு வங்கி பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து  உத்தரவிட்டிருக்கிறது. பீப்பிள்ஸ் வங்கியிடம் போதிய  மூலதனம் இல்லை. மேலும்  வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை. அதனால் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கியின் உரிமத்தை ரத்து செய்து ரசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது.

மேலும்  கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருந்து வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே டெபாசிட் காப்பீடு மற்றும் கடன் உத்திரவாத கழகத்திடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் வரை காப்பீடு தொகை கிடைக்கும் என அறிவித்திருக்கிறது. வங்கி அளித்துள்ள தகவலின்படி மொத்த வாடிக்கையாளர்களை 99 விழுக்காட்டினருக்கு மேற்பட்டோருக்கு முழு டெபாசிட் தொகை வழங்கப்பட்டுவிடும் என ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கி தொடர்ந்து இயங்குவது வாடிக்கையாளர் நலனுக்கு ஆபத்தானது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் வங்கி சேவைகளை உடனடியாக நிறுத்தும்படி ரசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, பீப்பிள்ஸ் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் பெறுவதற்கும், பணம் வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |