நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்குமே வங்கிக்கணக்கு இருக்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மோடி அவர்களால் 2014ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு இல்லாத 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கி கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு 2 லட்சம் ரூபாய்க்கான காப்பீடு திட்டம், ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகள், மத்திய மாநில அரசு நிதியுதவிகளும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கணக்கு தொடங்குவதற்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த வங்கிக் கணக்கு தொடங்கலாம். இந்நிலையில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா கணக்கு வைத்திருப்பவர்கள் 10,000 வரை ஓவர் ட்ராஃப்ட் மூலம் கடன் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 35,000 வரை கடன் பெறலாம் என்ற உச்ச வரம்பு இருந்த நிலையில், தற்போது இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும். 2,000 வரை எவ்வித நிபந்தனைகள் இல்லாமல் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் 65 வயதுடையவர்கள் இந்த சேவைகளை பெறலாம்.