Categories
தேசிய செய்திகள்

இந்த வங்கி வாடிக்கையாளரா நீங்கள்?… அப்போ அலர்ட்டா இருங்க…!!!

IDBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன் ஏடிஎம் சேவைகள் மூடப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு வங்கிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பணத்தை செலுத்தி, தேவைப்படும் போது எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் IDBI வங்கி தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு அவன் ஏடிஎம் சேவைகள் மூடப்படும் என்று எச்சரித்துள்ளது.

மேலும் பராமரிப்பு பணிகள் காரணமாக ஐடிபிஐ வங்கி சேவை மற்றும் டெபிட் கார்டு, ப்ரீபெய்ட் கார்டு சேவைகள் ஆகியவை 13 மற்றும் 14 ஆம் தேதி முடங்க வாய்ப்புள்ளதாகவும், பண பரிவர்த்தனைகள் தோல்வியடையும் பட்சத்தில் வங்கியில் தொடர்புகொள்ள அறிவித்துள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |