Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இந்த வயசில் இது தேவையா….? சிறுவனை கண்டித்து போலீஸ் செய்த செயல்…. சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்…!!

கிருஷ்ணகிரி காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் சிறுவனின் ஹேர்ஸ்டைலை கண்டித்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே மஹாராஜா கடை பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் அதேபகுதியில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகின்றார்.  இவர் சம்பவத்தன்று பூசாரிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது 15 வயது சிறுவன் ஒருவன் கோழிக்கொண்டை ஹேர் ஸ்டைல் வைத்துக்கொண்டு, காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு அந்த பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். இதைக்கண்ட கணேஷ்குமார் அந்த சிறுவனை அழைத்து படிக்கின்ற வயதில் உனக்கு இந்த ஹேர்ஸ்டைல் தேவையா? என்று கண்டித்துள்ளார். அதுமட்டுமின்றி அச்சிறுவனை அழைத்துக் கொண்டு சலூன் கடைக்குள் சென்று முடியை ஒழுங்காக வெட்டி அனுப்பியுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தை முழுவதையும் வீடியோ எடுத்த கணேஷ்குமார் அதனை சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனையடுத்து சிறுவனின் முகத்தை வீடியோ எடுத்து வெளியிட்டதற்காக பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தை கவனித்த மாவட்ட எஸ்பி கங்காதர், “சிறுவனை அழவைத்து வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இன்ஸ்பெக்டர் கணேஷ்குமாரை அதிரடியாக  ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றுவதாக” உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |