சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமான செயல்களை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் பகுதியில் இளையான்குடி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார்.
அவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் இட்டச்சேரி கிராமத்தில் வசித்து வரும் மாரி (67) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 150 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.