அசாமில் விஸ்வநாத் மாவட்டத்தில் புல்புலி கட்டடூன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மூன்று குழந்தைக்கு தாய் ஆவார். கடந்த 12 ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகிறார். இவர் 22 ஆண்டுகளுக்கு முன் தனது குடும்ப சூழலால் படிப்பை கைவிட வேண்டி இருந்தது. அதன் பிறகு காலங்கள் ஓட திருமணம் முடிந்து மூன்று குழந்தைகளுக்குத் தாயானார். ஆனால் அவரது கல்வி தாகம் தணியவில்லை. இதனை தொடர்ந்து 10 ஆம் வகுப்பு வாரிய தேர்வை பக்ருதீன் அலி அகமது உயர்நிலைப்பள்ளி வழியே எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது, என்னுடைய கனவு நனவான தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். நான் மெட்ரிக் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விருப்பத்துடன் இருந்தேன். ஆனால் குடும்பத்தில் நிலவிய சில காரணங்களால் அதனை மேற்கொள்ள முடியவில்லை. எனக்கு திருமணம் முடிந்த பிறகு குடும்பப் பொறுப்புகளை கவனிக்க வேண்டியிருந்தது.
அதன்பிறகு குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பும் இருந்தது. தொடர்ந்து வேலைக்கு செல்ல தொடங்கினேன். இருப்பினும் ஒருநாள் மெட்ரிக் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அதனால்தான் எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கும் பழக்கம் வைத்திருந்தேன். அதனை தொடர்ந்து தங்களது வேலைக்கு இடையே நேரம் எடுத்துக்கொண்டு படியுங்கள் என மற்றவர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். வயது ஒரு தடையாக இருக்க அவர்கள் விட்டுவிடக்கூடாது. தங்களுடைய மனதிலிருந்து செய்ய விரும்பி விட்டால் ஒவ்வொரு விஷயமும் சாத்தியமாகும். மேலும் நான் 22 ஆம் ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் இதனை செய்ய முடிந்துள்ளது. அதனால் கல்வி கற்று தேர்ச்சி பெற விரும்பி, ஆனால் நேரம் இல்லை எனக் கூறி அதனை செய்யாமல் இருப்பவர்கள் அதற்காக வெட்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.