Categories
தேசிய செய்திகள்

இந்த வயதில் இப்படி ஒரு பக்தியா…? 99 வயதில் ஐயப்பனை தரிசிக்க வந்த மூதாட்டி…. ஆச்சரியத்தில் மூழ்கிய கோவில் நிர்வாகம்….!!!!

சாமியை தரிசிக்க வந்த ஒரு மூதாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த கோவிலுக்கு பெண்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த தேவ் என்ற  99 வயது மூதாட்டி மாலையிட்டு ஐயப்பனை  தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். இவர் பிற  பக்தர்கள், போலீசார், நம்பூதிரிகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இதுகுறித்து அவர்கள் அந்த மூதாட்டியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் கூறியதாவது, “எனக்கு சிறுவயதிலிருந்தே ஐயப்பனுக்கு மாலை போட்டு அவரை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால்  விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் 50 வயதில் தான் எனது ஆசை நிறைவேறியது.  நான் 49 ஆண்டுகள் தொடர்ச்சியாக மாலை போட்டு ஐயப்பனை தரிசனம் செய்ய வருகிறேன்” என கூறியுள்ளார். இதனை கேட்ட போலீசார் மற்றும் தேவஸ்வம் போர்டு பணியாளர்கள் மூதாட்டியின் பாதுகாப்பை  கருத்தில் கொண்டு அவருக்கு வீல் சேர் ஒதுக்கப்பட்டு சன்னிதானம் முகப்பு வரை அழைத்து செல்லப்பட்டுள்ளார். பின்னர் அவருக்கு ஐயப்பன் விக்ரகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதத்தை நம்பூதிகள் வழங்கியுள்ளனர். மேலும் இவரை பார்த்த பல பக்தர்கள்  செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

Categories

Tech |