Categories
உலக செய்திகள்

இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம்…. மே 16 ஆம் தேதி மறக்காம பாருங்க….!!!!

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் முதல் சந்திர கிரகணம் வருகின்ற மே 16ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த வருடத்தில் மொத்தம் நான்கு கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அதில் இரண்டு சூரிய கிரணங்கள் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள். இந்நிலையில் வருகின்ற மே 16ஆம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணம் ஆக இருக்கும். இதே காலை 7.02 மணிக்கு தொடங்கி மதியம் 12.20 வரை நடைபெறுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வருவதை சந்திர கிரகணம் என்கிறோம். இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் இதுவாகும். இதனை பிளட் மூன் என்கின்றனர். இதை இந்தியாவில் பார்க்க முடியாது. இருந்தாலும் இணையத்தில் பார்க்கலாம். இதற்கு அடுத்த நிகழ்வு நவம்பர் 8ஆம் தேதி நிகழவுள்ளது.

Categories

Tech |