Categories
தேசிய செய்திகள்

இந்த வருடத்திற்கான போனஸ்… 30 லட்சம் ஊழியர்கள் பயன்… மத்திய அமைச்சரவை அனுமதி…!!!

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வருடத்திற்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனசை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அந்தக் கூட்டத்தில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான உற்பத்தியோடு இணைந்த போனஸ் மற்றும் உற்பத்தியோடு சாராத போனஸ் கொடுப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் ரயில்வே, தபால் துறை, பாதுகாப்புத்துறை, பிஎஃப், இஎஸ்ஐ ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் 16.97 நான் கேசட் பணியாளர்களுக்கு வழங்கப்படும். அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை ரூ.2, 791 கோடி மதிப்பு. மேலும் பிஎல்பி இல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிகமான போனஸ் வழங்கப்படும். நான் கேசட் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதில் பணியாற்றும் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள். அதற்காக 946 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் அனைவருக்கும் நவராத்திரிக்கு முன்னரே முந்தைய ஆண்டு அவர்களின் செயல் திறனுக்கு ஏற்றவாறு நான்-கேசட் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. இந்த வருடம் உடனடியாக போனஸ் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த போனஸ் அறிவிப்பால் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயன் பெறுவார்கள். போனஸ் ஒரே தவணையில், நேரடி பரிமாற்றம் மூலமாக விஜயதசமிக்கு முன்னர் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜவடேகர் கூறியுள்ளார்.

Categories

Tech |