இந்த வருடம் ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட பதிவாக தளபதி விஜய் செல்பி புகைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெய்வேலியில் நடைபெற்ற போது விஜய்யை காண அவரது ரசிகர்கள் படையெடுத்துச் சென்றனர் . இதையடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்த விஜய் வேன் மீது ஏறி செல்பி எடுத்து அதை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார் .
https://twitter.com/TwitterIndia/status/1336163289282215936
இந்நிலையில் விஜய்யின் இந்த செல்பி புகைப்படம் இந்த வருடம் ட்விட்டரில் அதிக அளவு ரீட்வீட் செய்யப்பட்ட புகைப்படம் என்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இந்த ஆண்டு அதிக லைக்ஸ் பெற்ற பதிவாக விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த டீவீட்க்கு கிடைத்துள்ளது.