Categories
அரசியல்

“இந்த வழக்கிலாவது ஜெயக்குமாருக்கு கிடைக்குமா ஜாமீன்….??” எதிர்பார்ப்பில் தலைமை…!!

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அவருடைய உறவினரான மகேஷ்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். அதோடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளிக்க கூடாது என தன்னை அடியாட்கள் மூலம் மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். அந்த மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் ஜெயகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் தனது உறவினரான மகேஷ்குமார் என்பவருக்கும் அவருடைய சகோதரர் நவீன் குமாருக்கும் தான் நிலத்தகராறு இருந்து வந்ததாகவும் இதில் எந்த சம்பந்தமும் இல்லாத தன் மீது புகார் அளித்துள்ளதாகவும் ஜெயக்குமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மகேஷ்குமார் ஆளும் கட்சியை சேர்ந்தவர் எனவும் முன்னாள் அமைச்சரான தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக அவர் இவ்வாறு குற்றம்சாட்டி இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |