Categories
மாநில செய்திகள்

“இந்த வழக்கில் தேவைப்பட்டால் மட்டுமே வீடியோ பதிவு எடுக்க வேண்டும்”…… டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு….!!!!

தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் சி.சைலேந்திரபாபு, தமிழக காவல்துறையில் உள்ள அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மண்டல ஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஒரு சுற்றறிக்கையை நேற்று அனுப்பினார் அதில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 31ஆம் தேதி போக்சோ சட்ட வழக்குகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றியது. அந்த தீர்மானங்கள் அடிப்படையில் சில அறிவுரைகள் வழங்கப்படுகிறது. அதன்படி போக்சோ சட்ட வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையின் நகலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். அது மரணமாக இருந்தாலும், பிற குற்றமாக இருந்தாலும் நீதிமன்றத்துக்கு முதல் தகவல் அறிக்கை சென்று அடைந்த உடன் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அந்த நகலை உடனடியாக வழங்க வேண்டும்.

அதனைத் தொடர்ந்து அனைத்து விசாரணை அதிகாரிகளும் குற்றவியல் நடைமுறை சட்ட 164 இந்திய தண்டனை சட்டம் போக்சா பிரிவுகளில் பதியப்படும் வழக்குகளில் சிற்றார்களின் வாக்குமூலங்களை பெறும் போது வழக்கமான முறையில் செய்வது போல வீடியோ பதிவு செய்யக்கூடாது. வீடியோ பதிவு தேவையா என்பதை ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். முக்கியமான வழக்குகளில் நீதிமன்றத்தில் வீடியோ பதிவு எடுப்பது தொடர்பான உத்தரவு பெறப்பட்டாலோ அல்லது விசாரணை அதிகாரி வீடியோ பதிவு தேவை என கருதினாலோ மட்டுமே வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும் காவல்துறை சேர்ந்த புகைப்பட கலைஞர்களை கொண்டே வீடியோ பதிவு செய்திட வேண்டும். அந்த வீடியோ பதிவை மிகவும் பாதுகாப்பான முறையில் போலீசார் பராமரிக்க வேண்டும். இதனையடுத்து போக்சா வழக்குகளில் நிவாரணம் பெறுவதற்கான உரிமை இருப்பது குறித்து விசாரணை அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த அறிவுரைகள் அனைத்தையும் போக்சோ வழக்குகளின் விசாரணை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் விசாரணை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |