Categories
மாநில செய்திகள்

இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது…. அமலாக்கத்துறை எதிர்ப்பு….!!!!

அமைச்சர் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கூடாது என அமலாக்கத்துறை கூறியுள்ளது.

திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. தற்போது இவர் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார். இவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என கூறி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர்  தரப்பில் அரசியல் பலி வாங்கும் நடவடிக்கை காரணமாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படட்து. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை கூறியதாவது. பலர் தங்களுக்கு வேலை கிடைக்கும் என்று இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளனர். தற்போது அதை  திரும்ப பெற லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியமாக இருக்கு. இந்நிலையில் இவர் மீதான குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கை  ரத்து செய்யக்கூடாது என்று அமலாக்கத்துறை தெரிவித்தது. இதனை கேட்ட நீதிபதி வருகின்ற 28-ஆம் தேதிக்கு இந்த வழக்கை  ஒத்தி வைத்துள்ளார்.

Categories

Tech |