Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றமா?… பிக்பாஸ் குறித்து வெளியான தகவல்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் 2 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேறபடுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த நிகழ்ச்சியிலிருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் மற்றும்  சுசித்ரா ஆகியோர் மக்களின் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறியுள்ளனர்.

நேற்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 50 நாட்களை கடந்த நிலையில் வீட்டினுள் இன்னும் 14 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற நாமினேட் ஆனவர்கள் ரமேஷ், பாலா ,ஆரி, அனிதா, சனம், நிஷா மற்றும் சோம் . தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் அதிக போட்டியாளர்கள் இருப்பதால் வரும் வாரத்தில் இரண்டு பேர் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |