பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் -4 நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு பால் கேட்ச் டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் டாஸ்க் மற்றும் வீட்டு வேலைகள் அடிப்படையில் சிறந்த மற்றும் மோசமான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோ வில் இந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் அடிப்படையில் போட்டியாளர்கள் சிறப்பான மற்றும் மோசமான போட்டியாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர் . அதில் மோசமாக செயல்பட்ட போட்டியாளராக பாலாவை , அனிதா நாமினேட் செய்கிறார் .
#Day81 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/SO18oXtvy3
— Vijay Television (@vijaytelevision) December 24, 2020
இதற்கான காரணம் ‘கேபி,சோம் தூங்கும்போது தலைவராக பாலாஜி அதனை தட்டிக் கேட்டார் ஆனால் சிவானி தூங்கும்போது ஒன்றும் சொல்லவில்லை’ என அனிதா கூறுகிறார். இதற்கு பாலாஜி விளக்கமளிக்க முயலும் போது ஆவேசப்பட்ட அனிதா ‘நான் நாமினேட் செய்யும் போது இடையூறு செய்யக்கூடாது. நீங்கதான் சொன்னிங்க நாமினேட் பண்ணும் போது யாரும் பேசாதீங்கன்னு . நீங்க மட்டும் எல்லார் பெயரையும் சொல்லலாம், உங்க பெயரை யாரும் சொல்லக் கூடாதா ?என்கிறார். மோசமான போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் யார் ஓய்வறைக்கு அனுப்பப்படுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.