பிக்பாஸிலிருந்து இந்த வாரம் நாமினேட்டானவர்களில் வெளியேற அதிக வாய்ப்பு அனிதாவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இதுவரை பிக்பாஸில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ், சுசித்ரா, சம்யுக்தா ,சனம் ,ரமேஷ் ,நிஷா,அர்ச்சனா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்றைய எபிசோடில் வழக்கம்போல் நாமினேஷன் நடைபெற்றது. இதையடுத்து பிக்பாஸ் போட்டியாளர்கள் கூறிய காரணத்தோடு நாமினேஷன் லிஸ்ட்டை அறிவித்தார்.
அதில், ‘மற்றவர்களை குறை கூறி கேம் விளையாடுகிறார் ,தவறாக கேம் விளையாடுறாங்க, பங்களிப்பு குறைவாக இருக்கு, இந்த வீட்டில் பெருசா எதுவும் பண்றதில்ல, ஈடுபாடு குறைவா இருக்கு’ போன்ற காரணங்களால் இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள் ஆரி, ஆஜித் ,அனிதா, சிவானி ,கேபி ஆகியோரின் பெயரை கூறுகிறார். இவர்களில் இந்த வாரம் வெளியேற ஆஜித் மற்றும் அனிதாவுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது .