பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்படுவார் . அந்தவகையில் இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார் . வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்த அர்ச்சனா அன்பால் ஜெயிக்க முடியும் என்று கூறி இதுவரை போட்டியில் விளையாடி வந்தார். மேலும் இவர் தனியாக விளையாடாமல் தனக்கென ஒரு அன்பு அணியை உருவாக்கி கொண்டு அவர்களை முன்னிறுத்தி விளையாடியது போட்டியின் சுவாரசியத்தை குறைத்ததாக ரசிகர்கள் கருதினர்.
#Day78 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/MbWaowUtvw
— Vijay Television (@vijaytelevision) December 21, 2020
நேற்றைய எபிசோடில் அர்ச்சனா வெளியேறுவதாக கமல் அறிவித்தது போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அர்ச்சனா மிக மகிழ்ச்சியாக இருந்தார் . இதன்பின் அர்ச்சனா ‘ரியோ தான் டைட்டில் வின்னராக வேண்டும் மற்றும் சோம் தனக்கு கிடைத்த நல்ல நண்பன்’ என்று கூறிவிட்டு சென்றார். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரோமோவில் போட்டியாளர்கள் இந்த வாரம் வெளியேற இரண்டு நபர்களை நாமினேட் செய்கிறார்கள் . இதில் பலரும் ஆரி , அனிதா மற்றும் சிவானி பெயரை கூறுகின்றனர் . இவர்களையடுத்தது யாரெல்லாம்? இந்த வாரம் நாமினேசனில் இடம் பெற்றுள்ளனர் என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும் .