Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறுபவர் இவரா?… வெளியான தகவல்… ரசிகர்கள் அதிர்ச்சி…!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து மக்களின் குறைவான வாக்குகளைப் பெற்று சுசித்ரா வெளியேறினார். இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அனிதா, ஆரி, சனம், நிஷா, சோம், பாலாஜி, ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் மக்களில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறப் போவது ஜித்தன் ரமேஷ் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பிக்பாஸ் வீட்டில் யார் மனதையும் காயப்படுத்தாமல், சண்டைகளில் பெரிய அளவில் கலந்து கொள்ளாமல் ,அடுத்தவர் பிரச்சனைகளில் தேவையில்லாமல் தலையிடாமல் சேஃப் கேம் ஆடி வந்தார். இந்தவாரம் நடந்த கால் சென்டர் டாஸ்கில் ரம்யாவிடம் ஜித்தன்  மிக அசத்தலாக பேசியிருந்தார் . பிக்பாஸ் வீட்டில் எந்த கவலையும் இல்லாமல் ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாக சுற்றி வரும் ஜித்தன் ரமேஷ் வெளியேறுவது குறித்து ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |