பிக் பாஸ் ஆறாவது சீசன் விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து சொந்த காரணத்தின் காரணமாக ஜிபி முத்து வெளியேறினார். இதையடுத்து முதல் வாரத்தில் சாந்தி வீட்டை விட்டுவிட்டு வெளியேற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து பெண்களிடையே சீண்டல்களில் ஈடுபட்ட அசல் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேசன் லிஸ்டில் செரினா குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளார். இவருக்கு முன்னதாக ஆயிஷா உள்ளார். இதனால் இவர்கள் இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர விக்ரமன், அசிம், மற்றும் கதிர் ஆகியோரும் எலிமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.