Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இந்த விருதை பெறுவதற்கு… இதன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்… மாவட்ட ஆட்சியர் தகவல்…!!

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அகிம்சை மற்றும் பிற காந்திய கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பான பங்காற்றியவர்கள் அமைதிக்கான காந்தி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அகிம்சை மற்றும் பிற காந்திய கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்கு எதிராக இழைக்கப்படும் சமூக நீதி மற்றும் அமைதிக்கான பங்களிப்பு, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காகவும், மனித சமுதாயத்தை மேம்படுத்துவதற்காகவும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இனம், தேசியம், பாலினம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இவ்விருதுக்கு கடந்த பத்து வருடங்களில் வெளியிடப்பட்ட படைப்புகளும் பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் முக்கியத்துவம் வாய்ந்த சமீபத்தில் வெளியிடப்பட்ட படைப்புகளும் தகுதியானதாக பரிந்துரைக்கப்படுகிறது. அமைதிக்கான காந்தி விருது பெறுவதற்கு தற்போது 2021-ஆம் ஆண்டிற்கு தகுதியான நிறுவனங்கள் மற்ற நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருதுக்கு தகுதியுடைய சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய நிறுவனங்களும், தனிநபர்களும் www.indiaculture.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளது. அங்கு தொடர்பு கொண்டு விபரங்கள் குறித்து கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |