Categories
மாநில செய்திகள்

இந்த விஷயத்துல குஜராத் தான் பஸ்ட்…..  மத்திய அரசே முழுக்க முழுக்க காரணம்…. அமைச்சர் பொன்முடி அதிரடி….!!!!

போதைப் பொருட்கள் இந்த அளவு அதிகமாக இருப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் இளைஞர்கள் இடையே போதை பொருள் பழக்கம் அதிகமாகி வருகின்றது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போதை பொருள் பழக்கம் அதிகமாகி வருவதை தடுக்க தமிழ்நாடு மட்டும் நடவடிக்கை எடுத்தால் பத்தாது. மத்திய அரசு அதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். போதைப்பொருள் இந்த அளவு பரவியதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

குஜராத்தில் இருக்கும் துறைமுகம் தனியார் மயமாக்கப்பட்டு விட்டது. இங்கு வெளிநாட்டில் இருந்து தான் போதை பொருள் இறக்குமதி செய்யப்படுகின்றன. தனியார் துறைமுகம் வழியாக இவைகள் இந்தியாவிற்குள் வேகமாக ஊடுருவி வருகின்றது. போதை போல் கடத்தலில் குஜராத்தின் முந்தரா துறைமுகம் முதல் இடத்தில் உள்ளது. துறைமுகங்களை தனியார் மையம் ஆக்கியதால் போதைப் பொருள்கள் வளர்ந்து வருகின்றது. இவற்றை தடை செய்ய வேண்டும். அனைத்து எதிர்கட்சிகளும் இதை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அந்த வகையில் தமிழகத்தில் போதை பொருட்கள் வளர்ந்துள்ளன. விஜயவாடா துறைமுகம் வழியாக போதை பொருட்கள் தமிழகத்திற்கு கொண்டுவரப்படுகின்றது. மத்திய அரசு இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருட்களை ஒழிக்கும் முயற்சியில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஆந்திரா, தெலுங்கானா வழியாக போதை பொருட்கள் தமிழகத்திற்குள் கடத்திவரப்படுகின்றது. அதை தடுக்க முதல்வர் முழு முயற்ச்சி எடுத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |