Categories
சினிமா தமிழ் சினிமா

இந்த விஷயத்தை மறைச்சுட்டாங்களே… இசைவாணிக்கு திருமணம் முடிந்துவிட்டதா?… புகைப்படம் இதோ…!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள இசைவாணியின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் சீசன்-5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இன்று இந்த நிகழ்ச்சியின் பத்தாவது எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இதில் திருநங்கையான நமிதா மாரிமுத்து திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பிக்பாஸ் வீட்டுக்குள் முதல் ஆளாக சென்றவர் தான் பிரபல கானா பாடகி இசைவாணி. இந்த நிகழ்ச்சியில் இசைவாணி தன்னுடைய குடும்ப கஷ்டத்தைப் பற்றி பேசியிருந்தார்.

அதில் ‘அப்பாவுக்கு பாடகராக வேண்டும் என ஆசை. ஆனால் வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. வீட்டில் சாப்பாடு இருக்காது, போட்டுக்கொள்ள துணி இருக்காது, ஒருவேளை சாப்பாடு மட்டும் தான்’ என கூறி போட்டியாளர்களை கண்கலங்க வைத்தார். இந்நிலையில் இசைவாணி தனக்கு திருமணமாகி விவாகரத்தான விஷயத்தை மறைத்துள்ளார். கானா பாடகர் ஸ்ரீகாந்த் தேவா என்பவரை திருமணம் செய்த இசைவாணி, பின் அவரை விவாகரத்து செய்து  பிரிந்துள்ளார். தற்போது இசைவாணியின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |